2025 மே 19, திங்கட்கிழமை

இன்று யுத்த வெற்றி நாள்...

S.Renuka   / 2025 மே 19 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

30 வருட யுத்த நிறைவின் வெற்றிக் கொண்டாட்டத்தின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று திங்கட்கிழமை (19) பத்தரமுல்லையில் உள்ள போர்வீரர்கள் நினைவுச் சின்னத்திற்கு முன்பாக மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை  நடைபெறும் என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந் நிகழ்வில் ஜனாதிபதி உட்பட நாட்டின் பாதுகாப்பு துறைசார் முக்கியஸ்தர்கள், தூதுவர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள், யுத்தத்தில் உயிர் தியாகம் செய்த இராணுவத்தினர் மற்றும் அங்கவீனமுற்ற இராணுவத்தினரின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

 தேசிய வெற்றி தின நினைவு தினத்திற்கு இணையாக, பத்தரமுல்லை பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சிறப்பு போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X