2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'மக்களுக்காகச் சேவையாற்றுவதே அரச அலுவலர்களின் பொறுப்பு'

Princiya Dixci   / 2016 நவம்பர் 22 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தனிப்பட்ட ரீதியிலன்றி நாட்டுக்கும் மக்களுக்கும் முன்னுரிமை வழங்கி நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் உள்ள மக்களுக்காகச் சேவையாற்றுவது, அனைத்து அரச அலுவலர்களின் பொறுப்பாகும்' என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மகாவலி அதிகார சபையின் புதிய நியமனங்கள் மற்றும் பதவி உயர்வு பெற்ற அலுவலர்களுடன், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுத் திங்கட்கிழமை (21) இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவரையும் ஒரேவிதமாக நடத்துவது ஒரு நாட்டின் ஜனாதிபதியின் பொறுப்பாகும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுயாதீனம், பக்கச்சார்பின்மை மற்றும் நடுநிலையாகச் செயற்படுதல் ஜனாதிபதிக்குரிய பொறுப்பாகும் எனவும் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கிய எதிர்காலமான மகாவலி அதிகார சபை, தனது பணிப் பொறுப்புக்களைப் புதிய நோக்குடனும் புதிய தோற்றத்துடனும் முன்கொண்டு செல்வேண்டுமென குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்றைய நாளுக்காவும், எதிர்கால தலைமுறையினருக்காகவும் தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து அலுவலர்களும் அர்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும்; தெரிவித்தார்.

மகாவலி அதிகார சபையின் ஆட்சேர்ப்புச் செய்யும் ஒழுங்கு விதிகள், அதிகார சபையில் சேவையாற்றும் ஆளணியினருக்கு அநீதி ஏற்படாதவாறு திருத்தம் செய்யப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .