2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

24 மணிநேரத்தில் ரூ.2 கோடி வருமானம்

Kogilavani   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 15ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மாத்திரம், அதிவேக நெடுஞ்சாலை மூலம் ஒரு கோடியே 76 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக, அதிவேக நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்தார். குறித்த தினத்தில் மாத்திரம், அதிவேக நெடுஞ்சாலையில் 5 இலட்சத்து 57 ஆயிரத்து 023 வாகனங்கள் பயணித்துள்ளன என்று தெரிவித்த அவர், அவற்றில் பெருமளவான வாகனங்கள் (9,600 வாகனங்கள்) கடவத்தையூடாகவே, அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசித்துள்ளன என்றும் கூறினார்.

கடந்த 8ஆம் திகதிக்கும் 12ஆம் திகதிக்கும் இடையில், அதிவேக நெடுஞ்சாலை, அதிக வேலைப்பளுவுடன் காணப்பட்டது. அக்காலப் பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையில் 23 விபத்துகள் ஏற்பட்டு, மூவர் காயமடைந்தனர். அத்துடன், 100 தொழில்நுட்பக் கோளாறுகள் இடம்பெற்றன என்றும் அவர் கூறினார்.

அத்துடன், சுமார் 300 மீற்றர் தூரத்துக்கு வாகன நெரிசல் ஏற்பட்டதுடன், இதனால், பயணப் பணத்தை வசூலிக்கும் அதிகாரிகள், வாகனங்களுக்கு அருகில் சென்று பணத்தை வசூலித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .