2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

'மஹிந்தவுக்குப் பணம் கொடுத்தது தவறு'

Kogilavani   / 2016 மே 19 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

'யாராக இருப்பினும், தமது தனிப்பட்ட தேவைக்காக அரசாங்கத்திடம் பணம் பெற்றுக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவின் உகண்டாப் பயணத்துக்கு பணம் கொடுத்தது, தவறான விடயம் தான்' என்று அரசாங்கம் நேற்றுத் தெரிவித்தது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியதாவது,

'நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுள், தனது சொந்த வெளிநாட்டு பயணத்துக்காக அரசாங்கத்திடம் பணம் கேட்டவர் மஹிந்த ராஜபக்ஷ ஒருவரே ஆவார். அதுவும், தான் முன்னாள் ஜனாதிபதி என்பதால், விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்துக்கொண்டிருக்காமல் ஹோட்டலில் தங்கவைக்க வேண்டும் என்றும், தனது பயணத்துக்கான ஏனைய செலவுகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வெளிவிவகார அமைச்சிடம் மஹிந்த கோரியிருந்தார்.

எனினும், எந்த தலைவரும் இவ்வளவு சலுகைகளைக் கேட்காத காரணத்தினால், அவருக்கான விமான டிக்கெட்டுக்கான கட்டணத்தை மட்டுமே நாம் ஏற்றுக்கொண்டோம்' என்றார்.

இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பிடித்துள்ள அமைச்சரொருவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருவதாகவும், அந்தக் கறுப்பாட்டின் முகத்திரையை விரைவில் கிழிக்கவுள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X