Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர (ஐ.ஜீ.பி), “ஒகே சேர்... ஒகே சேர்... கைதுசெய்யவிடாமல் நான் பார்த்துகொள்கின்றேன்” என்று உறுதியளித்தது யாரிடம் என்று சபையில், நேற்று வியாழக்கிழமை கேட்கப்பட்டது.
ஜே.வி.பியின் எம்.பியான, அனுரகுமார திஸாநாயக்கவும், ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியுமான விமலவீர திஸாநாயக்கவும் கேள்வியெழுப்பினர்.
ஜனாதிபதி மைத்திரிபால சபையில் நேற்று உரையாற்றியதன் பின்னர் எழுந்த விமலவீர எம்.பி, இரத்தினபுரியில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டிருந்த ஐ.ஜி.பிக்கு அலைபேசி அழைப்பொன்று வந்தது. அதன்போது, மேடையிலிருந்து கீழிறங்க ஐ.ஜி.பி, “ஒகே சேர்... நான் பார்த்துகொள்கின்றேன். ஒகே... ஒகே... சேர்” என்று யாரிடம் உறுதிமொழியளித்தார் என்று ஜனாதிபதியிடம் வினவினார்.
அவரது கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “அந்த வீடியோவை நானும் பார்த்தேன். பொலிஸ் மா அதிபர் அவ்விடத்தில் நடந்துகொண்ட விதமானது தவறானது. அதுதொடர்பில் விசாரணை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன் என்றார்.
இந்த விவாதத்தில் மற்றுமொரு சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் ஜே.வி.பியும் எம்.பியான அனுரகுமார திஸாநாயக்க, பொலிஸ் மா அதிபர், சேர்... சேர்... என்று சொன்னது, சட்டம் ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்னாயக்கவுடன் என தான் கருதுவதாக தெரிவித்தார்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago