2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

'ராஜபக்ஷக்கள் இல்லைத்தானே?'

Kanagaraj   / 2016 மே 11 , மு.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பனாமாவில் மொஸக் பொன்செகா சட்ட ஆலோசனை நிறுவனத்தின் மூலமாக, பணத்தை முதலிட்டுள்ளவர்களில் ராஜபக்ஷக்கள் இல்லைத்தானே என்று, முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சர்வதேச தாதியர் தினம், கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் தலைமையில் இடம்பெற்றது.

வைபவம் இடம்பெற்று, அங்கிருந்து வெளியேறும் போது, அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்கள், பனாமாவில் மொஸக்
பொன்செகா நிறுவனம் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இதேவேளை, தன்னுடைய புதல்வர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் யோஷித ராஜபக்ஷ இருவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டமையானது அரசியல் பழிவாங்கலாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X