2025 மே 21, புதன்கிழமை

1,500 ரூபாய் இலஞ்சம் பெற்ற சார்ஜென்ட் கைது

Gavitha   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

1,500 ரூபாயை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தில் சார்ஜென்ட்டாகவும் பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றுபவர், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலாவதியான அனுமதிப்பத்திரத்துடன் லொறியொன்றில் மணலை ஏற்றிச் செல்வதற்கு, சட்டநடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக இந்த இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரியால், 5,000 ரூபாய் இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாகவும் அந்தத் தொகையில் 1,500 ரூபாயை பெறும் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X