2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

‘வெற்றியின் உண்மையான உரிமையாளர் இலங்கையின் இராணுவமே’

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

“67 வருடங்களுக்கும் மேலாக தளர்ந்து விடாத இலங்கை இராணுவத்தின் முன்னேற்றம் குறித்துப் பெருமைப்படுகின்றேன்” என்று தெரிவித்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி. சில்வா, “முன்னாள் தளபதிகள், அனைத்து இராணுவ அதிகாரிகள், ஏனைய தரத்திலுள்ளவர்கள், சிவில் ஊழியர்கள் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களே இந்த வெற்றிப் பயணத்தின் உண்மையான உரிமையாளர்கள்” என்றும் தெரிவித்தார். 

இலங்கை இராணுவத்தின் 67ஆவது வருட நிறைவு நிகழ்வு அணிவகுப்பு மரியாதை, பனாகொடை இராணுவ முகாமில் நேற்று திங்கட்கிழமை(10) காலை இடம்பெற்றது. அதில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் இராணுவத் தளபதி இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், “67 வருடங்களுக்கும் மேலாக தளர்ந்து விடாத இலங்கை இராணுவத்தின் முன்னேற்றம் குறித்துப் பெருமைப்படுகிறேன். முன்னாள் தளபதிகள், அனைத்து இராணுவ அதிகாரிகள், ஏனைய தரத்திலுள்ளவர்கள், சிவில் ஊழியர்கள், இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களே இந்த வெற்றிப் பயணத்தின் உண்மையான உரிமையாளர்கள். 

இராணுவ பணியாளர்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் இணையற்ற வீரம் உலக நாடுகளால் மிகவும் உயர்வாகப் பாராட்டப்பட்டது. 

இலங்கை இராணுவமானது, இயற்கை சீற்றங்கள் ஏற்படும் நேரங்களில் நாட்டு மக்களுக்கு அளப்பரிய உதவிகள் செய்துவருவதுடன், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பையும் பலப்படுத்தி சேவை புரிந்து வருகின்றது. 

இலங்கையானது இன்று, உலகில் மிகவும் அமைதியான மற்றும் நிலையான நாடுகளில் ஒன்றாக காணப்படுவதுடன் வேகமான அபிவிருத்தி செயன்முறைகளில் ஈடுபட்டுள்ளது. தேசிய அபிவிருத்தி திட்டம் இதற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்குகின்றது. 

தகவல் மற்றும் தொழிநுட்ப ரீதியான தேவைபாடுகள் அதிகரித்துள்ள ஒரு காலக்கட்டத்தில் நாம் இருக்கின்றோம். அதற்கேற்றவாறு நவீன தொழிநுட்பத்திறன் மற்றும் அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். 

பாதுகாப்புத் தயார்படுத்தல்களை அவ்வப்போது சோதித்துக்கொள்ளவேண்டும். அதற்காக புதுமையான முறைகள், பயிற்சிகள் உலகில் முன்னேறிய நாடுகளுடன் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கு மேலதிகமாக, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையில் எமது இராணுவத்தை இணைத்துக் கொள்வதை அதிகரித்துள்ளோம். அதன் ஊடாக, சர்வதேசப் படைகளின் தரத்துக்கு எம்மை நாம் மாற்றிக்கொள்கின்றோம். 

வீரர்களின் மனஉறுதி மற்றும் மனநிறைவை உயர்த்தும் நோக்கில், காயமடைந்த இராணுவ வீரர்கள் மற்றும் அனைத்து வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக பல பொதுநலத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

கல்வி, திறன்மேம்பாடு, வீட்டு வசதி சுகாதாரம் போன்ற துறைகளின் தற்போது கவனம் செலுத்த எதிர்ப்பார்த்துள்ளோம். இத்தனை ஆண்டுகளின் இராணுவத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, அர்ப்பணிப்பு என்பன நிருபிக்கப்பட்டுள்ளன.இதனை தொடர்ந்து பாதுகாத்துக்கொள்ள அனைத்து இராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்” என இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .