2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

'வில்பத்து வீதியை நான் மூடுவேன்'

Kogilavani   / 2016 மே 06 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

'வில்பத்து சரணாலயத்துக்கு ஊடாக மன்னார் வரை செல்கின்ற வீதியை நான் மூடுவேன்' என்று, வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (05), ஐ.தே.க எம்.பியான புத்திக பத்திரண கேட்டிருந்த கேள்விகளுக்கு  பதிலளித்ததன் பின்னர் எழுப்பப்பட்ட குறுக்கு கேள்விக்கு அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'சேனைப் பயிர்ச்செய்கை, விலங்குகளை வேட்டையாடுதல் அத்துடன் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் காரணமாக, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு உரிய வனங்களுக்குச் சேதம் விளைவிக்கப்படுகின்றது என்பது உண்மை. உயரதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக, இத்தகைய சேதங்களை தடுத்து நிறுத்த இயலாதுள்ளது. எனினும், வில்பத்து சரணாலயத்தின் ஊடான வீதியை மூடுவேன்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X