2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘ஸீப்ரா’ கடவைக்குச் சிக்கல்

Princiya Dixci   / 2016 நவம்பர் 24 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக, கேள்விப்பத்திரம் கோருதல் மற்றும் நிதியொதுக்குதல் எனும் நடைமுறைகள் இருப்பினும், பாதசாரிகள் கடவைகளுக்கு வெள்ளை வர்ணம் தீட்டுவதற்கு, நிதி ஒதுக்கப்பட மாட்டாதெனவும் அவை டிசெம்பர் 3ஆம் திகதியிலிருந்தே நடைமுறைப்படுத்தப்
ப​டுமெனவும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்தது. 

இந்தத் திட்டத்துக்காக, ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட பணம் இருப்பினும், அதற்கும் மேலதிகமாகச் செலவளிக்க விரும்பவில்லை என்று, அவ்வதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி தெரிவித்தார். 

நாம் கேள்விப்பத்திரம் கோரி இந்தத் செயற்றிட்டத்துக்காக கூடுதல் பணத்தைச் செலவிட்டிருக்கலாம். ஆனால், நாம் அதை விரும்பவில்லை. இதனால்தான், நாம் இந்தத் திட்டத்தை முடிக்க ஒரு வருட காலம் கேட்டுள்ளோம் என, அவர் தெரிவித்தார். 

பனிப்பொழிவைக் கொண்ட நாடுகளிலேயே, வீதிகளைக் கடக்க மஞ்சள் நிறத்திலான கடவைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஏனைய நாடுகளில், வெள்ளைக் கடவைகளாகவே அவை பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், இலங்கையிலும் இந்த மாற்றம் ஏற்படுத்தப்படுவதாக, அதிகார சபையினால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .