2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

03 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று

S. Shivany   / 2021 ஜனவரி 06 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹல்துமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தையடுத்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று வயது சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின்போது, அச்சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்படி சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்த 10 ஆம் இலக்க வார்ட்டை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், குறித்த வார்ட்டில் பணியாற்றிய ஊழியர்கள் அவர்களது வீடுகளில் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

பாணந்துறை பகுதியில் இருந்து சென்றிருந்தோரே மேற்படி விபத்தில் சிக்கியுள்ளனர். இவர்களில் 8 பேர் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X