2024 மார்ச் 28, வியாழக்கிழமை

10,935 படையினருக்கு பதவியுயர்

Editorial   / 2021 ஒக்டோபர் 10 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா 567 அதிகாரிகளையும், 10,368 பிற பதவிகளையும் உயர்த்தியுள்ளார்.

ஆயுதப்படைகளின் தளபதியான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஒப்புதலுடன்  பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி,  மூத்த பிரிகேடியர்கள் எண்மர் மேஜர் ஜெனரல்களாகவும், 17 கேர்ணல்கள் பிரிகேடியர் பதவிக்கும், 42 லெப்டினன்ட் கேர்ணல்கள் கேர்ணல் பதவிக்கும், 60 மேஜர்கள், லெப்டினன்ட் கேர்ணல்களாகவும், 256 கேப்டன்கள் மேஜர்களாகவும், 10 லெப்டினன்ட்கள் கெப்டன் பதவிக்கு, லெப்டினன்ட் பதவிக்கு 152 இரண்டாவது லெப்டினன்ட்கள்  லெப்டினன்ட்களாகவும் மற்றும் லெப்டினன்ட் (கியூஎம்) பதவிக்கு 22 நன்னடத்தை அதிகாரிகள் பதவியுயர்த்தப்பட்டுள்ளனர்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா பதவியேற்ற இரண்டு வருட காலத்திற்குள், இலங்கை இராணுவத்தில் அதிகாரிகள் மற்றும் இதர பதவிகளுக்கு மிக அதிகமான பதவி உயர்வுகளை வழங்கியுள்ளது.

இலங்கை இராணுவத்தின் 72ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டே இந்தப் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X