2025 மே 24, சனிக்கிழமை

100 இந்தியர்களுக்கு அனுமதி

Freelancer   / 2022 மார்ச் 10 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கச்சதீவில் நாளையும், நாளைமறுதினமும் நடைபெறும் புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழாவில் தமிழகத்தில் இருந்து 100 பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை இராமேஸ்வரம் வேர்க்கொட்டு பங்குத்தந்தை தேவசகாயம் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். 

இராமேஸ்வரத்திலிருந்து பக்தர்கள் வருவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எனினும், இந்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இது தொடர்பான மேலதிக தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனப் பதிலளித்தார். (K)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X