2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

100 மீற்றருக்குள் சுண்ணக்கல் அகழ வேண்டாமென பரிந்துரை

R.Maheshwary   / 2021 ஜனவரி 05 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

விக்டோரியா நீர்த்தேக்க பகுதியிலிருந்து 100 மீற்றருக்குள் சுண்ணக்கல் அகழ்வை தடைசெய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுற்றாடல் அமைச்சரின் ஆலோசனைக்கமைய, அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவால் நியமிக்கப்பட்ட குழுவே இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது.

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவரான பேராசிரியர் அநுர வல்பொலவின் தலைமையின் கீழ் இந்த குழு ஆய்வுகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அண்மைக்காலமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்ட சிறியளவு நில அதிர்வால், நீர்த்தேக்கத்துக்கு பாரிய பாதிப்பு இல்லை என்றும் அக்குழு தெரிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்படும் நில அதிர்வானது 2 ரிக்டருக்கும் குறைவானதாகவே பதிவாகுவதாகவும் நீர்த்தேக்கத்தில் நீர் நிரம்பும் போது ஏற்படும் அதிர்வுகள் இயற்கையான ஒன்றென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, இதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்துக்கு பணித்துள்ளதாகவும் சுண்ணக்கல் அகழ்வின் போது ஏற்படும் வெடிப்புகள் அங்கிகரிக்கப்பட்ட அளவுகளில் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது தொடர்பிலும் அவதானம் செலுத்துமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

எனவே, நீர்த்தேகத்துக்கு அண்மித்த பகுதிகளில் சுண்ணக்கல் அகழ்வால் ஏற்படும் வெடிப்புகள்  குறித்து அதிகம் கவனம் செலுத்தி 100 மீற்றருக்கு உட்பட்ட பகுதிகளில் சுண்ணக்கல் அகழ்வுக்கு தடைவிதிக்குமாறும் இந்த குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .