2025 நவம்பர் 01, சனிக்கிழமை

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல்: தகவல் வழங்குமாறு உத்தரவு

Editorial   / 2017 நவம்பர் 30 , மு.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் வைத்து தமிழ் இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல்களை வழங்குமாறு, கடற்படைத் தளபதிக்கு, கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன நேற்று (29) உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய, கடற்படையின் லெப்டினன் கேணல் பிரசாத் ஹெட்டியாரச்சியின் கீழ் கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் பற்றிய விவரங்களை, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்குமாறு, நீதவான் உத்தரிவிட்டுள்ளார்.

மேலும், கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ.தஸநாயக்க உள்ளிட்ட ஏழு பேரையும் தொடர்ந்தும் எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்குடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ.தஸநாயக்க உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X