Freelancer / 2022 மே 03 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
- என்.ராஜ்
இந்திய அரசின் அனுசரனையில், ஏற்படுத்தப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை அரசியலமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் 13 ஆவது திருத்தச்சட்டம் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய பாரதிய ஜனதா கட்சியின், தமிழக தலைவர் அண்ணாமலை, யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று (02) தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அவர், ஹட்டன் கொட்டகலையில், நேற்றுமுன்தினம் (01) நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அதன்பின்னர், யாழ்ப்பாணத்துக்கு நேற்று (02) விஜயம் செய்த அவர், அங்கு தமிழ்த் தேசியக் கூட்டப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அண்டைய நாடான இந்தியா, இலங்கைக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்குகின்றது. எரிபொருள், மருந்து மற்றும் நிதியுதவிபோன்ற பல்வேறுபட்ட உதவிகளை இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய அரசு வழங்கி வருகின்றது என்றார்.
அதேபோலத்தான், இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி ஜெயசங்கரினால், இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கை ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அது விரைவில் நடைமுறைத்தப்படும் சாத்தியப்படுமும் உள்ளது.
இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியானது சுமுகமான நிலையை விரைவில் எட்டுவதற்கு இறைவன் அருள் புரிய வேண்டும்.
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக, இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா வருவோருக்கு கடுமையான சட்டங்களை பிரயோகிக்க வேண்டாமென நாம் அங்குள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி யுள்ளோம் என்றும் கூறினார்.
இலங்கை மக்களை தமிழ் மக்களை தொப்புள் கொடி உறவுகளை மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் நேசக்கரம் நீட்டி பார்க்கின்றோம் என்று குறிப்பிட்ட அவர், தென்னிந்திய மீனவர்களால் வடபகுதி மீனவர்கள் பாதிப்பினை எதிர்நோக்குகிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது என்றார்.
அது உண்மைதான் அது கட்டாயமாக தீர்க்கப்பட வேண்டிய விடயம்தான். ஆனால், சிறையில் இருப்பதற்காக எந்த இந்திய மீனவனும் இலங்கை கடற்பரப்புக்குள் வருவதில்லை ஏதோவொரு தவறு இடம்பெற்றால்தான் வந்துவிடுகின்றனர். அது தொடர்பில் உரிய கவனம் எடுக்கப்படும் என்றார்.
23 minute ago
34 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
34 minute ago
41 minute ago
1 hours ago