2025 ஜூலை 10, வியாழக்கிழமை

14 ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவை பூர்த்தி செய்யப்படும்

ஆர்.மகேஸ்வரி   / 2018 நவம்பர் 07 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள 14ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவையில் வழங்கப்படாமலிருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்படுமென, அமைச்சரவையின் பேச்சாளர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (7) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் இன்று சிக்கல் நிலையொன்று ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கல் நிலைக்கு உத்தயோகப்பூர்வமாகவோ, உத்தியோகப்பூர்வமற்ற நிலையிலோ புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் பொறுப்புக் கூற வேண்டியுள்ளது.  இந்த நிலையின் கீழ்  13 பிரதான அமைச்சுக்களுக்கான அமைச்சர்கள் நியமிக்க முடியாமல் உள்ளது. எனத் தெரிவித்து ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ​அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .