2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

’14 காற்றாலைகளையும் அமைப்பதில் அரசு உறுதி’

Freelancer   / 2025 ஒக்டோபர் 10 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னாரில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட 14 காற்றாலைகளையும் அமைப்பதே அரசாங்கத்தின் இறுதி முடிவாக உள்ளது என்று  மன்னார் மறை மாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஆனால் நான் அங்கு ஜனாதிபதியுடன் எந்தவித ஒப்பந்தங்களையும் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மன்னார் பிரஜைகள் குழுவில் நேற்று (09) மாலை சர்வமதக் குழு, பொது அமைப்புக்கள், போராட்டக் குழு ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்குக் கருத்துத்  தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஜனாதிபதியைச் சந்தித்து மன்னார் மக்கள் ஏன் காற்றாலை வேண்டாம் என்று கூறுகின்றார்கள் என்பதைத் தெளிவுபடுத்தினேன். எனினும், அரசாங்கத்தின் நிலைப்பாடு அந்த 14 காற்றாலைகளையும் மன்னார் தீவில் திட்டமிட்டபடி அமைக்க வேண்டும் என்பதே. அதில் அவர்கள் மிகவும் திடமாக இருக்கின்றார்கள் என்றார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X