Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2021 ஜூலை 15 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலியல் செயற்பாடுகளுக்காக இணையத்தளங்களின் ஊடாக விற்கப்பட்ட 15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர் என குற்றச்சாட்டப்பட்டிருந்த கப்பல் கெப்டனும், அவருடைய உதவியாளரும் அடையாளம் காண்பிக்கப்பட்டனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இவ்விருவரும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (15) நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்டனர்.
அதன்போது, பாதிக்கப்பட்ட அச்சிறுமி, அவ்விருவரையும் அடையாளம் காண்பித்துள்ளார்.
தனியார் கப்பல் நிறுவனத்தின் கெப்டன், கெப்டனின் உதவியாளர் ஆகிய இருவருமே இவ்வாறு அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.
அந்த அடையாள அணிவகுப்பின் பின்னர், அவ்விருவருக்கு எதிராகவும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன என சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
அதன்பின்னர், அவ்விருவரும் கடுமையான நிபந்தனையின் கீழ் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் தலா, 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ரொக்கப்பிணையிலும் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான தலா இரண்டு சரீரப்பிணைகளிலும், கொழும்பு மேலதிக நீதவான் லோஜினி அபேவிக்ரம விடுதலை செய்துள்ளார்.
முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கோ, முறைப்பாட்டாளரின் சாட்சிகளுக்கோ எதிர்காலங்களில் எவ்விதமான அழுத்தங்ளையும் பிரயோகிக்கக்கூடாது என கடுமையாக உத்தரவிட்டுள்ள மேலதிக நீதவான், அவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்குமாயின் நிபந்தனை பிணை இரத்துச் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்படுவீர்கள் என சந்தேகநபர்கள் இருவருக்கும் எச்சரித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
4 hours ago
4 hours ago