Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Renuka / 2025 ஓகஸ்ட் 11 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்குளி தொடக்கம் சொய்சாபுர வரை செல்லும் 155ஆம் இலக்க பஸ் சேவை இன்று திங்கட்கிழமை (11) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஆலோக கருணாரத்ன தலைமையில் வடகொழும்பு நகர சபை உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதனையடுத்து குறித்த பஸ் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நீண்டகால தேவையாகவும் கோரிக்கையாகவும் இருந்து வந்த வடகொழும்பின் பிரதான மார்க்கங்களில் செல்லும் 155ஆம் இலக்க பஸ் சேவை சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது.
பின்னர் வடகொழும்பு நகர சபை உறுப்பினர் ஏனைய நகரசபை உறுப்பினர்களின் தீவிர முயற்சியால் ஒரு சில பஸ்கள் குறித்த பகுதியில் இயக்கப்பட்டன.
இருந்தும் குறித்த பகுதியில் வாழும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய மாநகர சபை அமர்வுகள் மற்றும் பிற அபிவிருத்தி கூட்டங்களில் தொடர்ச்சியாக இந்த பஸ் சேவையின் தேவைகள் தொடர்பில் எடுத்து கூற்பட்ட நிலையில், அதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தி இருந்தனர்.
இதன் பயனாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இன்று திங்கட்கிழமை (11) காலை 05.30 மணி முதல் 155 பஸ் சேவையானது மட்டக்குளி தொடக்கம் நகர மண்டபம் (town hall) வரை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டது.
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago