2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

16 நாட்களுக்கு மூடப்படும் மதுபான சாலைகள்

Freelancer   / 2023 மே 30 , பி.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அனைத்து மதுபானசாலைகளும் 16 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காமம் ஆலய எசல பெரஹெர திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள மதுபானக் கடைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜூன் 19ஆம் திகதி முதல் ஜூலை 4ஆம் திகதி வரை மதுக்கடைகள் மூடப்படவுள்ளன.

இந்த காலப்பகுதியில், திருவிழா நடைபெறும் இடத்தை மதுவற்ற பகுதியாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஊவா மாகாண கலால் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .