2025 ஜூலை 07, திங்கட்கிழமை

17 அரச நிறுவனங்கள் தொடர்பான அறிக்கை கோப் குழுவால் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

Editorial   / 2019 ஜனவரி 24 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்றத் தெரிவுக் குழுவான கோப் குழுவால் 17 அரச நிறுவனங்கள் தொடர்பான  விசாரணை அறிக்கைககள் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துனெத்தியால் இவ்வறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதிகளுக்குள் குறித்த 17 நிறுவனங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் குறித்த தகவல்களே இந்த அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அறிக்கைகளில்  விசேடமாக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நட்டம் தொடர்பான தகவல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .