2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘18ஐ மீள அமுல்படுத்த அரசாங்கம் முயற்சி’

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு  அரசாங்கம் முயற்சிக்கிறதெனக் குற்றஞ்சாட்டும் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார, 18ஆவது திருத்தத்தை மீள  அமுல்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுகின்றன எனவும்  சாடினார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போ​தே,  அவர் மேற்கண்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர்,  தற்போதைய ஆளும் தரப்பில் உள்ளோர்,  ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், விவசாயிகளுக்கு உரம் இலவசமாக வழங்கப்படுமெனக்  கூறினர். ஆனால்,  பணம் செலுத்தி கூட உரத்தைப் பெற்றுகொள்ள முடியாத நிலைமையே இன்று காணப்படுகிறது என்றார்.

அத்துடன், புதிய அரசாங்கத்தின் கதைகள் அனைத்தும், மக்களை ஏமாற்றும் தேவதைக் கதைகள் எனக் கூறிய சந்திராணி பண்டார, வழமைப்போன்று ராஜபக்‌ஷர்களின் நாடகத்துக்கு நாட்டு மக்கள் ஏமாற்றமடைந்துவிட்டனர் என்றார்.

அதேபோல், மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டு 18ஆவது திருத்தத்தை மீள அமுல்படுத்தும் முயற்சிகள் இடம்பெற்றால்,  நாடு அச்சுறுத்தலான நிலைக்குத் தள்ளப்படுமெனத்  தெரிவித்த அவர், பெரும்பான்மை ஆசனங்களைப்  பெற்றுகொண்டு,  ​ஐ.தே.க வலுவாக எதிர்க்கட்சியாக செயற்பட தயாராகிறது என்றார்.

எவ்வாறாயினும், நாடாளுமன்றத் தேர்தலை வெற்றிகொள்ளும் வரை,   ராஜபக்‌ஷர்கள் மக்களின் தலைகளை தடவுவார்கள்  எனத் தெரிவித்த அவர், தேர்தல் வெற்றியின் பின்​னரே, தங்களின் உண்மையான  சுயரூபத்தை வெளிப்படுத்துவார்கள் என்றார் .  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .