Editorial / 2019 ஜூன் 27 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்க வேண்டுமாயின் ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
19ஆவது திருத்தம் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர்,
19ஆவது திருத்தம் சரியில்லையெனில் ஜனாதிபதியும் சரியில்லை என்று கூற முடியும். இந்த ஜனாதிபதியும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கே வந்தார். அன்று அவரே சோபித்த தேரரின் கால்களுக்கு முன்னாளிலிருந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாகத் தெரிவித்தார். ஆனால் இன்று எப்படி அதனை மாற்ற முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் 20ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து, விரைவில் ஜனாதிபதி முறையை இல்லாது செய்யுமாறும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
38 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
3 hours ago