2026 மார்ச் 18, புதன்கிழமை

2 மணிக்கு பின்னர் விழிப்புடன் இருக்கவும்

Editorial   / 2026 மார்ச் 18 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பகுதிகளில் இன்று (18) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய, சபரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னரே இந்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு கடலோரப் பகுதிகளில் காலை வேளையில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் காலங்களில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X