Editorial / 2019 ஜூலை 22 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பா.நிரோஸ்
“ஜனாதிபதி தேர்தலின் போது 2018ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலையே பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதால், 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகும்” என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் கூறினார்.
2015 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதால் இளைஞர்கள் அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், அதனாலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம்சுமத்தினார்.
அத்துடன், 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலை தயாரித்து அதன் அடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
21 minute ago
42 minute ago
48 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
42 minute ago
48 minute ago
53 minute ago