2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘200 ஏக்கர் அழிவடைந்தது’

Editorial   / 2019 பெப்ரவரி 03 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் – சிங்கமலை வனப்பகுதியில் ஏற்பட்ட தீ பரவலால், 200 ஏக்கர் நிலப்பரப்பு அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (02) பிற்பகல் 2 மணியளவில் குறித்த வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, ஹட்டன் பிரதேசத்துக்கு நீர் வழங்கும் பிரதான நீர்க்குழாய் குறித்த வனப்பகுதியின் கீழ் பகுதியினூடாவே செல்வதாகவும்  தெரிவிக்கப்பட்டது.

தீயை கட்டுபடுத்தும் நடவடிக்கைகளுக்காக லக்ஷபான பகுதியிலிருந்து இராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டதோடு, பிரதேசவாசிகளும் இணைந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .