2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

”200 மதுபான கடைகளைத் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது”

Simrith   / 2024 மார்ச் 19 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

FL4 பிரிவின் கீழ் 200 மதுபான நிலையங்களை திறப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவற்றில் 15 அனுமதிப்பத்திரங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.

200 மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதா, அதில் 15 மதுக்கடைகளுக்கு ஏற்கனவே உரிமம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை அரசு வெளியிட வேண்டும் என்று அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேர்தலை இலக்காகக் கொண்டு ஏற்கனவே ஆறு மதுபான உற்பத்தி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரேமதாச தெரிவித்தார்.

கலால் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறியின் அனுமதியின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

அரசாங்கம் நடைமுறையில் உள்ள சட்ட கட்டமைப்பிற்கு புறம்பாக செயற்படவில்லை எனவும், சரியான முறையில் கேள்வி எழுப்பினால் முழுமையான பதில் வழங்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

வருங்கால SJB அரசாங்கம் இவ்வாறான அனைத்து சட்டவிரோத உரிமங்களையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், கலால் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தேர்தலை குறி வைத்து மதுபான உரிமங்களை வழங்குவது தவறானது என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X