2025 மே 16, வெள்ளிக்கிழமை

27,420 தொன் மெகீ நூடில்ஸ் அழிப்பு

Menaka Mookandi   / 2015 ஜூன் 18 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோனோசோடியம் க்ளூட்டாமேட் எனும் எம்.எஸ்.ஜீ சுவையூட்டி, அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ள 27 ஆயிரத்து 420 தொன் நிறையுள்ள மெகீ உடனடி நூடில்ஸ்களை நெஸ்லே நிறுவனம், சீமெந்து ஆலைகளில் இட்டு அழித்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு அதிகாரசபையினால் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் போது, மெகீ நூடில்ஸ் உற்பத்தியில் எம்.எஸ்.ஜீ சுவையூட்டி, அதிகளவு பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

மனித உடலுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் இந்த நூடில்ஸை அழிக்கும் நோக்கிலேயே அவை சீமெந்து ஆலைகளில் இட்டு அழிக்கப்பட்டதாக அச்செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .