2025 மே 16, வெள்ளிக்கிழமை

ரவிராஜ் கொலை: சந்தேகநபர் மனு

Kanagaraj   / 2015 ஜூன் 18 , பி.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜ் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் கைதுசெய்து தன்னை தடுத்து வைத்துள்ளமை தன்னுடைய அடிப்படை உரிமையை மீறுவதாகவும் என்றும் அவர், தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான முனசிங்க ஆராய்ச்சிகே சம்பத் முனசிங்க என்பவரே அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துகொள்வதற்கு உயர்நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .