2025 மே 16, வெள்ளிக்கிழமை

மஹிந்தவுக்கு வேட்பு மனு இல்லை: ராஜித்த

Gavitha   / 2015 ஜூன் 18 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் வேட்பு மனு வழங்கப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசியப்பட்டியலில் இடம்பெறப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்ததாக, அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன கூறினார்.

அதேநேரம், பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர்கள் இல்லையென்றும் தேர்தல் பிரசாரங்களை நடத்துவதற்கும் இடமில்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்ததாக ராஜித்த குறிப்பிட்டார்.

இன்று வியாழக்கிழமை(18) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .