2025 மே 16, வெள்ளிக்கிழமை

'இலங்கைக்கு ஜப்பான் ஆதரவளிக்கும்'

Thipaan   / 2015 ஜூன் 20 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துடனான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு ஜப்பான் அரசு தொடர்ந்து ஆதரவளிக்குமென ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஃபுமியோ கிஷிடா வலியுறுத்தினார்.

பன்முகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட ஒரு தேசத்தை கட்டியெழுப்பும் இலங்கையின் முயற்சிக்கு தமது அரசாங்கத்தின் ஆதரவு இருக்குமென அவர் தெரிவித்தார்.

ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபேயின் அழைப்பின் பேரில் மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடனான கலந்துரையாடலின் போதே  ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .