2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஜோக்கர்களாக மாறியுள்ள அரசியல்வாதிகள்: மஹிந்த

Menaka Mookandi   / 2015 ஜூன் 21 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல்வாதிகளின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, அரசியல்வாதி என்றாலே நகைச்சுவை கதாபாத்திரமாக மாறிவிட்டது. அந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சூரியவெவ , முவன்பெலஸ்ஸ பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 'புதிய அரசியல் முறைமையொன்றை அமைச்சரவையில், ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளார். அது விருப்பு வாக்குமுறைமையற்ற தேர்தல் முறைமையாகும்' என்றார்.

ஒரே கட்சிக்குள் அடிபிடிபட்டுக்கொள்ளும், பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்ளும் தேர்தல் முறைமைக்கு பதிலாக புதிய தேர்தல் முறைமையொன்றே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று அரசியல்வாதி என்பவன் நகைச்சுவைக் கதாபாத்திரமாக மாறியுள்ளான். பழுதடைந்துள்ள மிக மோசமாக விருப்பு வாக்குமுறை தேர்தல் முறையை மாற்ற வேண்டும்' என அமைச்சர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .