Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 21 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைக் கொண்டு நடத்துவதற்கு வெளியாட்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டுக்கும் கட்சிக்கும் தேவை இரண்டு தலைவர்கள் அல்லர், ஒரு தலைவரே. பிரிவினை எனக்கு தேவையில்லை. அனைவரையும் இணைத்துக்கொண்டு செயலாற்றவே நான் விரும்புகின்றேன் என்றும் குறிப்பிட்டார்.
நுவரெலியா மாநகரசபை கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, 'ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தனித்து போட்டியிடப்போவதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான கருத்துக்கள், சு.க.வுக்குச் செய்யும் துரோகமாகும்' என்றார்.
S.P.Jesuthasan Monday, 22 June 2015 05:14 AM
விதண்டாவாதம். ஒருவருக்கு இரண்டு கண்கள், இரண்டு கைகள், இரண்டு கால்கள் என இருக்க முடியுமானால் நாட்டுக்கோ, கட்சிக்கோ ஏன் இரண்டு தலைவர்கள் இருக்க முடியாது?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago