2025 மே 16, வெள்ளிக்கிழமை

புரட்சி முடியவில்லை: பிரதமர்

Menaka Mookandi   / 2015 ஜூன் 21 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஜனவரி 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட புரட்சி இன்னமும் முடியவில்லை என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்நாட்டு இளைஞர், யுவதிகளுக்கு தெளிவான எதிர்காலமொன்றை உருவாக்கிக் கொடுப்பதே இந்நாடு எதிர்கொண்டுள்ள பாரியதும் முதன்மையானதுமான பிரச்சினையாகும் என்றும் குறிப்பிட்டார்.

அலரி மாளிகையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற தேசிய இளைஞர் முன்னணியின் சம்மேளனத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'வெளிநாட்டு முதலீடுகளை நம் நாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் தேவை' என்றும் பிரதமர் இதன்போது மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .