2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஒருவர் கொலை: வர்த்தகருக்கு இரண்டு வருட கடூழிய சிறை

Thipaan   / 2015 ஜூன் 24 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுபோதையில் வேகமாக காரை செலுத்தி ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 28 வயதான வர்த்தகருக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூரிய, இரண்டுவருட கடூழிய சிறைதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

அத்துடன் குறித்த நபர் 3 இலட்ச ரூபாய் நட்டஈடு வழங்கவேண்டுமெனவும் நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் திகதி கிரிபத்கொடை, சபுகஸ்கந்த வீதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வர்தகர், மதுபோதையில் வேகமாக காரை செலுத்தி சென்;று சைக்கிளில் பயணித்த மூவர் மீது மோதியதில்  அவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

அவ்வீதியால் பயணித்த இன்னொருவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட வர்த்தகருக்கே நீதவான் மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .