2025 மே 15, வியாழக்கிழமை

கொட்டகெத்தன இரட்டைகொலை; பிணை கேட்டு ஜோடி மனு

Kanagaraj   / 2015 ஜூன் 29 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹாத்தை, கொட்டகெத்தன இரட்டை கொலைவழக்கு தொடர்பில் மூன்றுவருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொக்குகமகேஹேவாகே தர்ஷன என்றழைக்கப்படும் ராஜூ மற்றும் அவருடைய மனைவியான ரஷிகா சாந்தனி உதயகுமாரி என்றழைக்கப்படும் அசோகா ஆகிய இருவருக்கும் பிணை வழங்குவதா இல்லாயா என்பது தொடர்பில் எதிர்வரும் 3ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன அறிவித்தார்.

கொட்டகெத்தன நயனா நில்மினி( வயது 52) காவிந்தியா சந்துரங்கி (வயது 17) ஆகியோர் கொலை தொடர்பிலேயே இவ்விருவரும் கடந்த 3 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இவ்விருவருக்கும் 8 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட 5 குழந்தைகள் இருப்பதாகவும் அவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு அவ்விருவருக்கும் பிணை வழங்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிநின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .