2025 மே 15, வியாழக்கிழமை

'தேர்தல் கண்காணிப்பு பணிகளில் நிபுணர்கள்'

Princiya Dixci   / 2015 ஜூன் 29 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

திறைமை வாய்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களை நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் கண்காணிப்பு மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் ரசங்க ஹரிச்சந்திர தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 25,000ற்கும் அதிகமான கண்காணிப்பாளர்களை நியமிப்பதற்கு தேர்தல்கள் கண்காணிப்பு குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய 15,000 கண்காணிப்பாளர்களை தாம் நியமிக்கவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராய்சி தெரிவித்துள்ளார்.

10,000 கண்காணிப்பாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கபே அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .