Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 01 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வி.நிரோஷினி
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் உறுப்பினர்கள் தொடர்பான விவரங்களை எதிர்வரும் 6ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படவுள்ளதாக அவ்விரு கட்சிகளும் அறிவித்துள்ளன.
இது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், நேற்று செவ்வாய்க்கிழமை (30) தெரிவிக்கையில்,
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழமைப்போல் தனித்து இலங்கை தமிழரசுக் கட்சியில் வீடு சின்னத்திலேயே போட்டியிடவுள்ளது.
அந்தவகையில், இம்முறை கிழக்கு மாகாண சார்பில் போட்டியிடும் உறுப்பினர்கள் தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் விடுதலை இயக்கம் மற்றும் தமிழ் மக்கள் விடுதலை கழகம் ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து ஆராய்ந்து வருகின்றன.
வழமைப்போல், இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேரும் போட்டியிடும் அதேவேளை மேலதிகமாக புதிய உறுப்பினர்கள் களமிறக்கப்படுவது தொடர்பாக ஆராயப்பட்டு இது தொடர்பான இறுதி முடிவை எதிர்வரும் 6ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
ஹாபீஸ் நசீர் கருத்து
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில்; மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக களமிறங்க தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.
இது தொடர்பான தீர்க்கமான முடிவை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமே வழங்குவாரெனவும் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக களமிறங்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.
எனினும், கிழக்கு மாகாண சபையின் தற்போதுள்ள நிலையை கருத்திற்கொண்டே தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் முடிவெடுக்கப்படும்.
மேலும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில்; மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் கட்சியின் தலைவரே தீர்மானிப்பார். எனவே, இது தொடர்பான தீர்க்கமான முடிவை எதிர்வரும் 6ஆம் திகதிக்கு பின்னர் அறிவிப்பதாக அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
21 minute ago
1 hours ago
14 May 2025