2025 மே 15, வியாழக்கிழமை

அன்னம் தனியாகதான் வரும்

Kanagaraj   / 2015 ஜூலை 03 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அன்னம் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணி, இம்முறை பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று அந்த முன்னணியின் பொதுச்செயலாளர் ஷாமிலா பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஜனாதிபதி தேர்தல்களிலும் பிரதான இரண்டு கட்சிகளுடன் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணி, இம்முறை தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர், தேர்தல்கள் ஆணையாளரிடம் உறுதியளித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவும் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் இந்த முன்னணியிலேயே போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .