2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கலவான பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூவர் பணியிலிருந்து இடைநீக்கம்

Gavitha   / 2015 ஜூலை 16 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலவானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 3 பேர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடமை நேரத்தில் கடமையை செய்யாது, புறக்கணித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் காரணமாகவே இவர்கள் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கலவான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகிய மூவருமே இவ்வாறு நேற்று புதன்கிழமை (15) முதல் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸ் நிலையத்துக்குள் இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான குழுமோதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லை என்று இவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X