2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

நாட்டை விட்டு நான் ஓடவில்லை : மஹிந்த

Kanagaraj   / 2015 ஜூலை 26 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் நாட்டை விட்டு நான் ஒடவில்லை, மீண்டும் என்னுடைய சொந்த இடத்துக்கே வந்தேன். அதை விட்டு பிரான்ஸுக்கோ இங்கிலாந்துக்கோ செல்லவில்லை.என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அம்பாந்தோட்டை வலஸ்முல்ல பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கூறினார்.

மேலும் அவர் தெரிவித்தாவது, 'நான் எப்போதும் உங்களை மறந்ததில்லை. பசில் ராஜபக்ஷ ஒரு அரசியல்வாதி என்பதால் அவர்  சிறைக்கு சென்றது பிரச்சினையில்லை, நிதிக் குற்றச்சாட்டின் பெயரிலேயே அவர் சிறைக்கு சென்றுள்ளார். 

ஆனால், அவர் மீது சுமத்தப்பட்ட  குற்றம் தொடர்பில் இன்னமும் விசாரணை நடத்தவில்லை. ராஜபக்ஷக்களை அழிக்க வேண்டும் , வெட்டவேண்டும் ,குழிதோண்டி புதைக்க வேண்டும் என் மேடைகளில் ரணில் பேசுகின்றார் . நாங்கள் செய்த குற்றம் தான் என்ன? நாட்டை யுத்ததில் இருந்து மீட்டதா? அல்லது நாட்டை  அபிவிருத்தி பாதையில் இட்டு  சென்றதா?' என்றார் .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X