2025 மே 16, வெள்ளிக்கிழமை

புதிய அரசில் புத்திசாலித்தனமான பாதுகாப்பு அமைச்சர் இருக்கிறார்: ரணில்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 08 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய அரசாங்கத்தில் புத்திசாலித்தனமான பாதுகாப்பு அமைச்சர் இருக்கின்றார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியமைத்தால் வடக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலைத்தூக்கும் என்று மஹிந்த ராஜபக்ஷ, தற்போது ஒவ்வொரு இடங்களிலும் கூறிக்கொண்டு வருகின்றார்.

ஆனால், ராஜபக்ஷ அவர்கள் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதியன்று பயங்கரவாத்தை முற்றுமுழுதாக தோற்கடித்து விட்டார் என்று நாங்கள் கனவு கண்டோம். எனினும், பயங்கரவாதம் மீண்டும் தலைத்தூக்கும் என்று அவரே கூறுகின்றார்.

எனினும், பயங்கரவாதம் தலைத்தூக்குவதற்கு நாங்கள் இனிமேலும் இடமளிக்கமாட்டோம் என்று நாங்கள் கூறுகின்றோம்.
எங்களிடம் புத்திசாலித்தனமான நல்ல பாதுகாப்பு அமைச்சர் இருக்கிறார். அவர் யாருமல்ல. அவர்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மீரிகமயில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .