Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Kanagaraj / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, ஒருகொடவத்தையில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையை அடுத்து பலாமரச்சந்தியிலிருந்து ஒருகொடவத்தை சந்திவரையிலான வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொழும்பு வடக்கு பிரிவின் சுற்றிவளைப்பு பிரிவினர் 9ஆம் திகதி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது, கிரேன்;ட்பாஸ் பொலிஸ் பிரிவில் ஸ்டேட் பகுதியில் வைத்து ஹெரேய்னுடன் பெண்ணொருவர் பகல் 11. 30 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அந்த பெண்ணை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்க நபரொருவர் அவ்விடத்திலேயே விழுந்துவிட்டார். அந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்துவிட்டார்.
மயங்கிவிழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 65 வயதான டி.பி பிரேமசிறி என்பவரே மரணமடைந்துவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்குக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் பொறுப்பதிகாரி கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பொலிஸ் அதிகாரியின் கவயீனம் காரணமாகவே அந்தநபர் மரணித்துவிட்டதாகவும் அந்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக சட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நபர் மரணமடைந்ததையடுத்தே அப்பிரதேசத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம், அப்பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றமான நிலைமை தற்போது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago