2025 மே 16, வெள்ளிக்கிழமை

சு.க.வில் பிறந்தேன் சு.க.விலேயே இறப்பேன்'

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்த கோஷ்டியிடம் இருந்து சுதந்திரக் கட்சியை மீட்கவே மீண்டும் அரசியல் மேடையேறினேன் என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி  சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பிறந்த நான், அக்கட்சியிலேய இறப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தான் ஐக்கிய தேசியக் கட்சியின் மேடையில் ஒருபோதும் ஏறப்போவதில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

குருநாகலில் பிரஜைகள் சக்தி அமைப்பு சனிக்கிழமை நடத்திய பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியலில் இருந்து ஒதுங்கி அமைதியாக வீட்டில் இருந்தேன். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான துஷ்ட சக்திகளினால், அழிவுக்கு உள்ளாகியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை காப்பாற்றுவதற்காகவே மீண்டும் அரசியல் மேடையில் ஏறநேர்ந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .