2025 மே 16, வெள்ளிக்கிழமை

தாஜுதீனின் கொலை குறித்து விசாரணை செய்வேன்: மஹிந்த

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் றகர் வீரர் வசீம் தாஜூதீனின் கொலை தொடர்பில் விசாரணை செய்யவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்திய  ஊடகவியாலளார் மாநாடொன்றில் எழுப்ப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

கேள்வியை எழுப்பிய ஊடகவியலாளர், இந்த கொலையில் ராஜபக்ஷ அரசாங்கம் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் ,ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் மூவருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதே என்று வினவினார்.
2012 ஆம் ஆண்டில் நடந்த இந்த விடயம் தொடர்பில்  இந்த அரசாங்கம் மீள் விசாரணை தொடர உள்ளதாகவும், இது அரசியல் நோக்கம் கொண்டது எனவும் அவர் கூறினார்.

சில தவறுகளை தான் செய்ததாகவும் ஆனால், யாரையும் சட்டத்தையும் கையிலெடுக்க அனுமதிக்கவில்லை  எனவும் அவர் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .