2025 மே 16, வெள்ளிக்கிழமை

புலிகளுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டுக்கு மஹிந்த மறுப்பு

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 09 , பி.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, தான் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, பொதுமக்களை வாக்களிக்க விடாது புலிகளே தடுத்திருந்தனர். இது தென்பகுதி சிங்கள மக்களின் வாக்குகளால் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெல்லுவதற்கு வழிவகுத்தது என்றும் அவர் கூறினார்.

கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துதெரிவிக்கையில்,

புலிகளுக்கு நான், பணம் கொடுத்திருந்தால், அவர்களை தோற்கடிப்பதற்கு கடுமையாக உழைத்திருக்கமாட்டேன் என்று தெரிவித்த அவர், உண்மையில் புலிகளுக்கு பணங்கொடுத்ததும் இந்திய அமைதிப்படையை தோற்கடிக்க புலிகளுக்கு ஆயுதம் கொடுத்ததும் யாரென்பது ஒன்றும் இரகசியமானதல்ல என முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐ.ம.சு.கூ வெற்றி பெறும் என்றும் தானே அடுத்த பிரதமராக பதவியேற்பார் என்றும் அவர் உறுதியாக கூறினார்.

ஜக்கிய தேசியக்கட்சி, தேர்தலின் பின்னர் கூட்டரசாங்கம் அமைக்கப்போவதாக கூறுவது, தம்மால் தனித்து பெரும்பான்மையை பெறமுடியும் எனும் சுயநம்பிக்கை அவர்களுக்கு இல்லை என்பதையே காட்டுகின்றதென அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .