Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2015 ஓகஸ்ட் 09 , பி.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் அரசியல் கைதிகள் எவருமில்லை என நீதியமைச்சரும், நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளருமான விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழோசைக்கே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இறுதியாக தடுத்து வைக்கப்படிருந்த அரசியல் கைதி சரத் பொன்சேகாவே எனவும் அவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளமையால் தற்போது அரசியல் கைதிகள் எவரும் சிறைகளில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
போர்க்காலத்தில் கைது செய்யப்பட்ட வெடிகுண்டு வைத்தல், கொலை செய்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதியாக கருத முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களையும் அரசியல் கைதிகளாகவே கருதவேண்டும் என சில நாட்களுக்கு முன் முன்னாள் இராணுவத்தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா, பிபிசிக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago