Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
2012ஆம் ஆண்டு மர்மமாக முறையில் மரணமான பிரபல்யமான றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் ஜனாஸா தற்போது தோண்டப்பட்டு கொண்டிருக்கின்றது.
அவரது ஜனாஸா தெஹிவளை ஜும்மா பள்ளிவாசல் மையவாடியிலேயே புதைக்கப்பட்டுள்ளது.
அவரது ஜனாஸாவை இன்று 10ஆம் திகதி திங்கட்கிழமை தோண்டியெடுப்பதற்கு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், கடந்த வியாழக்கிழமை அனுமதிவழங்கியிருந்தார். அதன் அடிப்படையில், நீதிமன்ற வைத்திய அதிகாரி, பொலிஸ், தெஹிவளை கிராமசேவகர் ஆகியோர் அவ்விடத்தில் பிரசன்னமாய் இருக்கின்றனர்.
அவரது ஜனாஸா புதைக்கப்பட்டுள்ள மையவாடிக்கு அண்டிய பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இன்றையதினமும் பெருமளவான பாதுகாப்பு தரப்பினர் அங்கு குழுமியிருக்கின்றனர்.
குடும்பத்தினர் விருப்பமின்மையினால் ஜனாஸாவை தோண்டியெடுப்பது தொடர்பில் செய்தி சேகரிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கு சென்றிருக்கின்ற ஊடகவியலாளர்கள் வேறொரு இடத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.
நாரஹேன்பிட்டியில் உள்ள சாலிகா விளையாட்டு மைதானத்துக்கு அருகில் வைத்து 2012ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி, அவர் பயணம் செய்து கொண்டிருந்த கார், திடீரென தீப்பற்றி எரிந்ததில் அவர் மரணமடைந்துவிட்டதாக அந்த காலத்தில் அறிக்கையிடப்பட்டிருந்தன.
அவருடைய சடலம் மறுநாள் 17ஆம் திகதியன்று காருக்குள்ளிருந்து மீட்கப்பட்டதாகவும் காருக்கருகில் கரித்துண்டுகள் கிடந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago