Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Kanagaraj / 2015 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
2012ஆம் ஆண்டு மர்மமாக முறையில் மரணமான பிரபல்யமான றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் கொலைத்தொடர்பில் தன்னுடைய குடும்பத்துக்கு எவ்விதமான தொடர்பும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய வானொலிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் தன்னுடைய குடும்ப நண்பன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவருடைய வீட்டுக்கு நாங்கள் சென்று வந்திருக்கின்றோம். இந்நிலையில், வசீம் தாஜூதீன் கடத்தப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸ் தகவல்கள் கிடைத்தன.
அரசசார்பற்ற நிறுவனமொன்றின் வாகனத்தின் ஊடாகவே அவர் கடத்தப்பட்டார் என்றும் அந்த வாகனம் அன்று அதிகாரத்தில் இருந்த பிரபல்யமானவரின் மனைவியுடையது என்றும் அதுதொடர்பிலேயே அரச சார்பற்ற நிறுவனத்தின் பிரதானியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.
இதேவேளை, 2012ஆம் ஆண்டு மர்மமாக முறையில் மரணமான பிரபல்யமான றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் ஜனாஸாவை எதிர்வரும் 10ஆம் திகதி தோண்டியெடுப்பதற்கு கொழும்பு மேலதிக நீதவான், குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுமதிவழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago